கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெகதேவி ஐகுந்தம் கூட்ரோட்டில் வசித்து வரும் முகமத் என்பவர் தன் வீட்டின் அருகில் உள்ள ஜெயவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் (26.10.2023)ஆம் தேதி காலை சுமார் 08.00 மணியளவில் ஆடு மெய்வதற்காக கட்டி வைத்து சென்றதாகவும் அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபர் ஒருவர் நிலத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டை திருடி செல்வதாக எங்க ஊரை சேர்ந்த கணபதி என்பவர் போன் செய்ததாகவும் ஆடு திருடிக்கொண்டு ஓட முயற்சித்த நபரை உறவினர்கள் உதவியுடன் பிடித்து வைத்து பர்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆடு திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். முகமத் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்