ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் புனிதநீராட ஆயிரக் கணக்கானோர் மேட்டூரில் கூடுவார்கள். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக மேட்டூருக்கு வருவது வழக்கம். கிராமமக்கள் தங்களின் குலதெய்வங்களின் உருவச்சிலைகளை மேளதாளம் முழங்க வானவெடிகள் வெடிக்க தலைச்சுமையாக கொண்டுவந்து மேட்டூர் காவிரியில் நீராட்டி எடுத்துச்செல்வர்கள்.
ஆடி அம்மாவாசை தினமான ஆகஸ்ட் 8-ந்தேதியும், ஆடி 28 நாளான ஆகஸ்ட் 13-ந்தேதியும் மேட்டூர் காவிரிபடுக்கை, அணைக்கட்டு முனியப்பன் கோவில், மேட்டூர் அணை பூங்கா பகுதிகளில், ஆகஸ்ட் 8இ13 ஆகிய நாட்களில் வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் வருகை தவிர்க்க வேண்டும் என்று மேட்டூர் சார் ஆட்சியர் வீர்பிரதாப்சிங் அறிவிப்பு விடுத்துள்ளார். ஆடி 18 தினமான ஆகஸ்ட் 3-னாம் தேதி காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாகுல் ஹமீது