மதுரை : மேலூர் வட்டம்,அருள்மிகு கள்ளழகர் சுவாமி திருக்கோவிலில், மலை மேல் ராக்காயி அம்மன் தீர்த்த தொட்டில் உள்ளது. இங்கு, தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில், பல்வேறு கிராமத்து பொதுமக்கள் தீர்த்த தொட்டிகள் புனித நீராடி, மலைமேல் உள்ள ராக்காயி அம்மன், பழமுதிர்சோலை முருகன், சுந்தரராஜ் பெருமாள், மோகனவல்லி தாயார், யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஆகியோரை வழிபட்டு கடைசியாக பதினெட்டாம்படி கருப்பசாமி வழிபட்டு புறப்பட்டு செல்வது வழக்கம்.அதன்படி ,ஆடி அமாவாசை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் மலை மேல் உள்ள ராக்காயி அம்மன் தீர்த்த தொட்டியில் புதிய நீராடி சுவாமிகளை வழிபட்டனர்.ஆடி அமாவாசை முன்னிட்டு, மதுரை பெரியார் நிலையம் கோரிப்பாளையம் பகுதியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மதுரை நகரில், அண்ணா நகர் மேலமடை சௌபாக்ய விநாயகர் கோவில், யானை குழாய் முத்துமாரியம்மன் ஆலயம் அண்ணா நகர் வைகை விநாயக ஆலயம், மதுரை சாத்தமங்கலம் பால விநாயகர் ஆலயம், சத்தி விநாயகர் ஆகிய கோவில்களில் ஆடி அமாவாசை முன்னிட்டு தர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சிவன் மற்றும் விநாயகர், பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றின் கரையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி