தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இழுப்பக்கரையில் சுமார் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர் அவர்கள் கும்பகோணம் அரியலூர் பாபநாசம் கபிஸ்தலம் சுவாமிமலை போன்ற ஊர்களுக்கு சென்று அங்குள்ளவர்களிடம் நன்கொடைகள் , அன்பளிப்பு போன்றவற்றை பெற்று பிழைப்பு நடத்தி வருகின்றார்கள். இந்நிலையில் பூமிகா என்ற திருநங்கை கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வந்த போது அவரிடம் பாபநாசம் வட்டம் மதகரம் மேலத்தெருவில் வசித்து வரும் காசி என்பவரின் மகன் ஐயப்பன் (26 ), என்பவர் மேற்படி திருநங்கையிடம் எனக்கு அப்பா அம்மா யாரும் கிடையாது நான் ஒரு அனாதை நான் உங்களைப் போல் மாற வேண்டும் என்று கூற அவரும் ஐயப்பனை தன்னுடன் அழைத்துக் கொண்டு அவர் குடியிருக்கும் அய்யம்பேட்டை அருகிலுள்ள இலுப்பக்கோரையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இரண்டு நாள் அவர் வீட்டில் இருந்த ஐயப்பன் அவர் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது கடந்த மார்ச் -27 அன்று அவருக்கு தெரியாமல் அங்கிருந்த ஸ்கூட்டர் ,பணம் மற்றும் மொபைல் ஆகியவற்றை திருடி சென்று விட்டார் இது சம்பந்தமாக அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டதை தொடர்ந்து பாபநாசம் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. பூரணி அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருமதி . வனிதா மற்றும் அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு ராஜேஷ்குமார் மற்றும் முதல் நிலைகாவலர் சௌந்தர், ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (மார்ச் 30 ) ஐயப்பன் ஊரான மதகரம் அருகில் உள்ள கிராமத்தில் ஒளிந்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஐயப்பனை கைது செய்தார்கள் மேலும் அவர் வைத்திருந்த ஒரு ஸ்கூட்டர், ஒரு செல்போன் , ஐயாயிரம் ரூபாய் ரொக்கம் முதலியவற்றை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்து அதன் பின் சிறையில் அடைத்தார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்