மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியையை கண்டித்து, சத்திரவெள்ளாளபட்டி கிராம பொதுமக்கள் (11/07/2023) காலை பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில் உள்ள கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை எனக் கூறி, தலைமை ஆசிரியையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த பாலமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கூட்டத்தை கலைந்து சென்றனர். விசாரணையில் பள்ளியில் உள்ள மின் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் கழிப்பறைக்கு தண்ணீர் இல்லை எனவும், இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி