திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீன்வளம் சார்ந்த இளங்கலை உள்ளிட்ட பல்வேறு பட்ட படிப்புகள் பயின்று வருகின்றனர். இங்கு ஆசிரியர் அல்லாத பணியில் 40க்கும் மேற்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து மீன்வளக் கல்லூரி வாயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதாகவும் அரசு நிர்ணயித்த சலுகைகள் ஏதும் வழங்கப்படுவதில்லை எனவும், ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு