செங்கல்பட்டு : தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெம்பாக்கம் (பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் மையம் முன்பு) மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மு.சீனுவாசன் தலைமை ஏற்றார். மறியலை ஜி. மத்தேயு மேனாள் மாநில பொருளாளர் துவங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர் கோரிக்கைகள் அரசாணை எண் 243 ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற இறுதி முடிவு தெரிந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று கூறியும் தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற கோரியும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் ஜோசப்,தா.ச.ரமேஷ்,கோ.க.முருகன், லூக் சாமுவேல்,மணிமோகன், சுரேஷ் மறியலில் வாழ்த்துரை வழங்கினர். மற்றும் இவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்