திருச்சி : திருச்சி மாவட்டம் 04.09.2020 அன்று திருச்சி அரிமா சங்கத்தின் சார்பாக ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சிப் பட்டறை பெரியார் நூற்றாண்டு வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி சரக காவல் துணைத் தலைவர் முனைவர் ஆனி விஜயா இ.கா.ப. அவர்கள் பேசிய பொழுது, மாணவர்களுடன் குருஸ்தானத்தில் அதிக நேரம் அவர்களுடன் இருக்கும் ஆசிரியர்களே உண்மையான குரு என்றும், மாணவர்களின் தேவை மற்றும் திறமை ஆகியவற்றை பெற்றோரைக் காட்டிலும் ஆசிரியர்களே அதிகமாக உணர முடியும் என்றும், சில குழந்தைகள் பெற்றோர் இன்றி மன அழுத்தத்தில் இருப்பவர்களை ஆசிரியர்களால் மட்டுமே அடையாளம் கண்டு அவற்றிற்கான தீர்வு காணப்படுகிறது.
மாணவர்களுக்கான நல்ல சமுதாயத்தை உருவாக்கவும், அவர்களின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்க கூடிய இடத்தில் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என்றும், ஆசிரியரை பெருமிதத்துடன் திருச்சி சரக காவல் துணைத் தலைவர் முனைவர் ஆனி விஜயா இ.கா.ப அவர்களால் கூறப்பட்டது.