திருச்சி: திருச்சி மாவட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் குறித்து சிறப்பு ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி திருச்சியில் நடைபெற்றது .
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹாக் இ கா ப அவர்கள் தலைமை தாங்கி திறன் வளர்ப்புப் பயிற்சியை தொடங்கி வைத்தார். குழந்தை கள் நலக்குழு தலைவர் கமலா முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கீதா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .
குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் . மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் பிரியதர்ஷினி வரவேற்றார். வழக்கறிஞர் ஜெயந்தி ராணி சிறப்பு ஆசிரியர்களுக்கு குழந்தை திருமண தடுப்பு சட்டம், குழந்தைகளை முறையாக தத்தெடுத்தல், குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்தார் .
மூத்த வழக்கறிஞர் மார்டின் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான இளஞ்சிறார் நீதி சட்டங்கள் குறித்து பயிற்சி அளித்தார் .பிஷப் ஹீபர் கல்லூரி உதவிபேராசிரியர் கிப்ட்சன் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள மன அழுத்த மேலாண்மையை சிறப்பு ஆசிரியர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆலோசகர் முத்துமாணிக்கம் நன்றி கூறினார். இப்பயிற்சியில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பு ஆசிரியர்கள் 95 பேர் கலந்து கொண்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி