பெரம்பலூர்: பெரம்பலூர்அருகே சத்திரமனை காமராஜர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஆனந்தி 39 இவர் வேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை மொபட்டில் சொந்த வேலையாக பெரம்பலூர் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது சத்திரமனை கருத்தான் நடராஜ் என்பவரின் வயல் அருகில் செட்டிகுளம் மெயின் ரோட்டில் ஆனந்தியின் வண்டிக்கு பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் ஆனந்தியின் கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் தங்க நெக்லஸ்- ஐ பறித்துக் கொண்டு வேகமாக சென்று தலைமறைவாகிவிட்டனர்.
மொபட்டில் சென்ற ஆனந்தி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். இது குறித்து ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் எஸ்ஐ மாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.