மதுரை : மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60), இவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஜான்சி ராணி ஆஜரானார். விசாரணை முடிவில், சுப்பிரமணி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் தீர்ப்பளித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி