மதுரை : அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியை இன்று 15.01.2020 ம் தேதி காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கிவைத்தார்கள். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS, அவர்கள் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தார்கள்.
காளைகளை பிடிக்கும் வீரர்கள் அனைவரிடமும் அரசு விதிமுறைகளை பின்பற்றும்படியும், அமைதியான முறையிலும் மற்றும் பாதுகாப்பன முறையிலும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்திடவேண்டும் என்றும், காளைகளை பிடிக்கும் வீரர்களை கவனமாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு 1053 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை நியமித்து, அமைதியான முறையில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி முடிவுற்றது. சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்கள், காளைபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் அனைவருக்கும் காவல் ஆணையர் அவர்கள் தனது நன்றியை தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை