மதுரை : மதுரை அருகே, அவனியாபுரம் காவல் நிலையம் சார்பில் பெரியார் சிலையில் இருந்து மதுரை விமான நிலையம் வரை போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, உத்தரவின் பெயரில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி-கல்லூரி பேருந்து நிலையங்கள் பொதுமக்கள் கூறும் முக்கிய இடங்கள் என பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடத்த உத்தரவிட்டனர். அதன் பேரில், மதுரை மாநகர் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் முன்னிலையில் அவனியாபுரம் உதவி ஆணையர் செல்வகுமார் தலைமையில்., காவல் ஆய்வாளர் பார்த்திபன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கப்பாண்டி ஆகியோர் ஏற்பாட்டில், அவனியாபுரம் பெரியார் சிலையில் இருந்து விமான நிலையம் வரை சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் போதை ஒழிப்புணர்வு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில், ஐந்திற்கும் மேற்பட்ட சார்பு ஆய்வாளர்கள்., 20க்கும் மேற்பட்ட தலைமை காவலர்கள், 40க்கும் மேற்பட்ட காவலர்கள், உடன் சுமார் 50 இருசக்கர வாகனங்களுடன் போதை ஒழிப்பு தொடர்பாக, இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு விமான நிலையம் வரை சென்று மீண்டும் காவல் நிலையம் வந்தடைந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி