இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டத்திற்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் உட்கோட்டங்களுக்கு இரண்டு அவசர உதவி காவல் வாகனங்களை (Emergency Response Police Vehicle) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 100 கண்ட்ரோல் ரூம் அழைப்புகள் மற்றும் அவசர/முக்கிய பிரச்சனைகளில், இவ்வாகனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள காவலர்கள் உடனடியாக சென்று நடவடிக்கை மேற்கொள்வர். மேலும், இவ்வாகனங்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும்.