இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்கள் அபிராமம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்கள் தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் பற்றியும், அதிகரித்து வரும் ஆன்லைன் குற்றங்களில் சிக்கி பணத்தை இழக்காமல் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.