திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் வெடிக்கடைகளில் சோதனை காவல் கண்காணிப்பாளர் திரு எஸ்.ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் வலங்கைமான் பகுதியில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக பட்டாசுகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து வலங்கைமான் பகுதிகளில் 9 கடைகளில் சோதனைகளில் ஈடுபட்டனர் இதில் நடு அக்ரஹாரத்தைச் சேர்ந்த பாலமுருகன் வலங்கைமானை சேர்ந்த ராஜா அக்ரகார தெரு ரமேஷ் குமார் ஆதிச்ச மங்கலம் ஐயப்பன் உப்பு கார தெரு சுந்தர் வலங்கைமான் ரவிச்சந்திரன் வலங்கைமான் ரவி கீழ அக்ரஹாரம் அருணகிரி வலங்கைமான் கீழ தெரு சரவணன் ஆகியோர் வெடிக்கடைகள் குடோன்கள் மற்றும் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்