மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முத்தாலம்மன். முனியாண்டி, அய்யனார் | கருப்பசாமி பங்குனி மாத உற்சவம் 5 நாட்களாக நடைபெற்றது. இதில், ஜந்தாவது நாளாக எருதுகட்டுவிடுவது வழக்கம்மாக உள்ளது இந்த நிலையில், சட்டசபை தேர்தல்/கெரான தடுப்பு உள்ள நிலையில் அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்துவேன் கல் மூலமாக ஜல்லிகட்டு காளைகளைக் கொண்டு வந்து அய்யனார் கோவில் பின்புறம் உள்ள வயல்வெளியில் 10-க்கும் மேற்பட்ட ஜல்லிகட்டுகளைகளை அவிழ்த்துவிட்டனர். அதை இளைஞர்கள் விரட்டி சென்றன.
இதில், 500க்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்தனர். இதை அறிந்த, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தினரை விரட்டினர். மேலும், முறையான அனுமதி இன்றி எருதுகட்டுடைத்தியாக கோவில்பட்டியைச் சேர்ந்த ராஷேஸ்கண்ணன் வயது (26) என்பவரை கைது செய்தனர். மூன்றுமினிவேன்கள் பறிமுதல் செய்தும், 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி