திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் பெய்துவரும் பலத்த கனமழையின் காரணமாக பாளை சேவியர் கல்லூரி அருகே 22.9.2019-ஆம் தேதியன்று மின்சார வயர் அறுந்து கிடந்த சாலையில் மின் ஊழியர்கள் வந்து சரி செய்யும் வரை பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் கொட்டும் மழையிலும் கடமையாற்றிய போக்குவரத்து தலைமை காவலர் திரு பிலிப்ஸ் ஜெயசீலன் அவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் திரு.சந்தன மாரியப்பன் அவர்கள் ஆகியோரை கண்ட பொது மக்கள் வெகுவாக பாராட்டினர். இதனையறிந்த திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர். திரு.சரவணன் அவர்கள் தலைமை காவலர் மற்றும் ஆட்டோ ஓட்டுனரை நேரில் அழைத்து பரிசு மற்றும் வெகுமதி அளித்து வெகுவாக பாராட்டினார்.