மதுரை : மதுரை அருகே பரவையில், உள்ள டெல்லி வேர்ல்ட் பப்ளிக் ஸ்கூலில் மாணவ மாணவியருக்கான அறிவு தேடல் கண்காட்சி நடைபெற்றது. மழலையர் பிரிவினர் முதல் ஆரம்ப நிலை மாணவர்கள் வரை கண்காட்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு , தனியார் பள்ளிகளின் மாவட்ட அலுவலர் கோகிலா சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்தார். பள்ளிச்செயலாளர் அசோக் குமார், பொறுப்பாளர் சரவண பிரதீப் குமார் , இயக்குநர் சக்தி பிரனேஷ் முதல்வர் சுனிதா தேவி ஒன்றிணைந்து நிகழ்வினைத் துவக்கி வைத்தனர். இக்கண்காட்சியில், தமிழ் ஆங்கிலம் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி புலமைகளிலும் மற்றும் அனைத்து பாடப் பிரிவிலும் நடைபெற்றது.
இந்திய பாராளுமன்றம், கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, பள்ளியின் விளையாட்டு மைதானம் கல்லூரியின் விளையாட்டு மைதானம், மற்றும் தமிழின் தொன்மையான சிறப்புகள் உள்ளிட்ட 486 வகையான கலைத்திறன்களை மாணவர்கள் வெளிப்படுத்தி பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த இந்த கண்காட்சி நடத்தப்பட்டதாக பள்ளி முதல்வர் தெரிவித்தார். ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல் திறனை கண்டு வியந்தனர். மேலும், இதுபோன்று நடத்தி அவர்களின் தனித் திறமையை வெளிக்குணர பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி