தர்மபுரி : தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.கலைச்செல்வன், உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு சாராயம், பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்தவர்கள் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன்படி அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், கம்பைநல்லூர், கடத்தூர், மொரப்பூர், தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சாராயம், மதுபாட்டில்களை விற்பனை செய்தவர்கள், கடைகள், ஓட்டல்களில் மது குடிக்க அனுமதித்தவர்கள் என மொத்தம் 1,455 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 318 பேர் பெண்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 29 ஆயிரத்து 807 மதுபாட்டில்கள், 874 லிட்டர் சாராயம், 2 ஆயிரத்து 300 லிட்டர் சாராய ஊறல், 492 லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 48 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.