விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டி மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் அக்னி ராமன்(31). இவர் இன்று காலை தனது சித்தப்பாவின் நினைவு இடத்திற்கு சென்றுவிட்டு இரு சக்கர வானகத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்
இதில் படுகாயமடைந்த அக்னி ராமனின் சத்தம் கேட்டு ஓடிவந்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அக்னி ராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முன்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.