விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உட்கோட்டம் மல்லாங்கிணர் காவல் நிலைய சரகத்தில் வரலொட்டி ரயில்வே பாலத்திற்கு கீழ் 3/1/2019 தேதி, மல்லாங்கிணறு பெட்ரோல் பங்க் ஓனர் சாம் கணக்கு முடித்து, பணத்துடன் பாலவனத்தம் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில், திருமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் 3 டூவில்ரில் வந்து பாலத்தின் கீழே காரை நிறுத்தி பணத்தை பறிக்க கொலை மிரட்டல் விடுத்து கண்ணாடி, கதவு எல்லாத்தையும் சேதப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் வாகனத்தை வேகமாக ஓட்டி சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து சென்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து CrNo.41/19 U/s.393 IPC @ 397,398,109 IPC r/w 3(1)TNPPDL Act வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரித்து வந்த நிலையில் வாகன தணிக்கை போது பிடிபட்ட ஒரு திருட்டு வாகனத்தில் மூலமாக இவ்வழக்கின் எதிரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து கொண்டே தகவல் சொல்லி கொண்டே இருந்த இருளப்பன் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தவர்.
இன்று மல்லாங்கிணறு சார்பு ஆய்வாளர் அசோக் குமார்க்குக் கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினருடன் அங்கு சென்று குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை