திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் ஆலய தியான மண்டபத்தில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் 115 வது ஜெயந்தி தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னை காளிகாம்பாள் ஆலய அறங்காவலர் பி.எஸ்.பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக அமைதிக்காக தியானம் நடைபெற்றது. மனவளக்கலை பயிற்சிகளான உடற்பயிற்சி மனவளக்கலை தியான பயிற்சி காயகல்ப பயிற்சி குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பழவேற்காடு பகுதியில் மனவளக்கலை பயிற்சிகளை எவ்வாறு கொண்டு செல்வது இப்பகுதி மக்களிடம் மனவளக்கலை ஈடுபாட்டினை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழவேற்காடு கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி,லைட் ஹவுஸ் வள்ளலார் கருணாலய நிர்வாகி ராஜி-வளர்மதி தம்பதியினர். பழவேற்காடு மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் ஜோதி குடும்பத்தினர், பிரம்மஞானி பி.கே.பாண்டியன், இயற்கை அறன் அறக்கட்டளை இயக்குனர் ஏகாட்சரம் தம்பதியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆலயத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. மனவளக்கலை மன்ற அருள்நிதி முத்து நிகழ்ச்சியை துவக்கி வழிநடத்தினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு