திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் குற்ற செயல்கள் புரிவோரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரிவாள்,கத்தி ஆயுதங்கள் தயார் செய்யும் பட்டறைகளை காவல்துறையினர் கண்காணிக்கும் படி உத்தரவிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் இன்று திருநெல்வேலி மாவட்ட அனைத்து உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளிலுள்ள அருவாள்,கத்தி ஆயுதங்களை செய்யும் பட்டறைகள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் ஆகியோரை கொண்டு விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப் பட்டது. அப்போது உரிமையாளர்களுக்கு காவல் துறையினர் அரிவாள் வாங்குபவரின் முகவரி,தொலைபேசி எண் விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும் அனைத்துப் பட்டறைகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் வைக்க வேண்டும் எனவும், மேலும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பவர்கள், சந்தேகத்திற்கிடமான வகையில் நபர்கள் யாரேனும் இருந்தால் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள ஹலோ போலீஸ் 9952740740 எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொண்டு தகவல் தருமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தினார்கள்.