சென்னை: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத்ராஜ், (வ/27) என்பவர் சென்னை சாலிகிராமம் பகுதியில் கடந்த 20.6.2020 அன்று இரவு ஆண்கள் தங்கும் விடுதியில் தனது நண்பர்களுடன் இருந்த போது, அங்கு குடிபோதையில் புகுந்த நபர் மதுபாட்டில்கள் கேட்டு தகராறு செய்து வினோத்ராஜ் மற்றும் அவரது நண்பர்களை அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
மேற்படி சம்பவம் குறித்து, வினோத்ராஜ் R7 K.K. நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
R7 K.K.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சரத் (எ) சரத்குமார்,( வ/27) அசோக் நகர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்த 1 அரிவாள் கைப்பற்றப்பட்டது.
மேலும் விசாரணையில், கைது செய்யப்பட்ட சரத் (எ) சரத்குமார் 20.06.2021 அன்று இரவு R5 விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வேறொரு தனியார் தங்கும் விடுதியில் உள்ள ஊழியர்களிடம் வீண் தகராறு செய்து, வரவேற்பறையில் இருந்த கண்ணாடி கதவு, போனை உடைத்து தாக்கியுள்ளார்.
மேலும் வெளியே நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு, சாலிகிராம் ஆண்கள் தங்கும் விடுதியில் புகுந்து மதுபாட்டில் கேட்டு அரிவாளால் அங்கு தங்கியிருந்தவர்களை தாக்கிய மற்றொரு சம்பவமும் தெரியவந்தது. மேற்படி குற்ற எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது