அரியலூர்: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 05.08.2024 இன்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை குழுவினரால் மூன்று நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்கியது. இதில் மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும், காவல்துறையினர் அதை எதிர்க்க உள்ள தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி வகுப்பை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினர் கலந்து கொண்டனர். பயிற்சியின் போது உடன் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.இளங்கிள்ளி வளவன் அவர்கள் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு.உலகநாதன் இருந்தார்கள்.