அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினரால், மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இரண்டு சக்கர வாகனங்களை மார்ச் 21-ல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெறும் என பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் மக்களவைத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற இருந்த பொது ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் இந்த பொது ஏலம் குறித்த தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்பதனை மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.