அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் இந்த கொரோனா காலத்தில் காவல்துறையினர் அதிக பணிச்சுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதால் , காவலர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தைக் கருத்தில் கொண்டு மனஅழுத்தத்தை கட்டுப்படுத்தவும், தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு வளர்க்கவும், கவனச் சிதறலில் இருந்து விடுபட்டு, மனஒருமைப்பாட்டை வளர்க்க. மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க
மஹா யோக மகேஷ் ரிஷி என்ற அமைப்பின் மூலம் காவலர்களுக்கு யோகா பயிற்சி நடத்தப்பட்டது. மஹா யோக பயிற்சியானது 23/05/2020 மற்றும் 24.05.2020 அன்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மதிவாணன் அவர்கள், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு மஹா யோக பயிற்சி பெற்றனர்.