அரியலூர் : தமிழகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக போலீசாருக்கு சிறப்பு பயிற்சி தமிழகம் முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு சென்னை கமாண்டோ படையினர் பேரிடர் மீட்பு பயிற்சி அளித்து வருவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி அரியலூர் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மணவாளன் அவர்களின் தலைமையில் 13.10.2020 இன்று பேரிடர் காலத்தில் தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, நீர் நிலைகளை கடப்பது பற்றி உடையார்பாளையம் பெரிய ஏரியில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் உடன் இருந்தார்.