அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை, பொன்பரப்பி ஆகிய இரண்டு இடங்களில் 16.11.2020 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இம்மாவட்டத்தில் எந்தவித சட்டவிரோத செயலுக்கும், ரவுடிசத்திற்கும், கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனைக்கு இம்மாவட்டத்தில் இடம் கிடையாது. மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இவ்வணிவகுப்பில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.திருமேனி அவர்கள், ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தேவராஜ், அரியலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மதன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணவாளன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) திரு.சபரிநாதன் மற்றும் செந்துறை காவல் ஆய்வாளர் திரு.ராஜ்குமார், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் மற்றும் 180க்கு மேற்பட்ட காவலர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.இது காவல்துறையின் செயல்முறைகளில் வழக்கமான ஒன்று தான். மேலும் இந்த அணிவகுப்பில் வஜ்ரா மற்றும் வருண் ஆகிய காவல்துறை வாகனங்களும் கலந்து கொண்டது.