அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களுடன் சோலைவனம் அமைப்பும் இணைந்து காவல்துறையின் அலுவலகங்கள், காவலர் பயிற்சி மைதானம், காவலர் குடியிருப்பு மற்றும் அனைத்து காவல் நிலையங்களிளும் சோலைவனம் அமைப்பும் காவல்துறையும் இதுவரை 3500- கற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள்.
மேலும் அதீத முயற்சியாக இரண்டு மரங்கள் மறு நடவு செய்யப்பட்டது. இதனின் அடுத்தகட்ட முயற்சியாக மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் மற்றும் சோலைவனம் அமைப்பினர் இணைந்து 04/07/2020 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தை சுற்றியுள்ள மரங்கள் நன்கு வளரும் வகையில் மரங்களின் மீது அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சென்று அகற்றி (பிடிங்கி) அதன் வளர்ச்சியை ஊக்குவித்து பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மரங்களில் பொதுமக்கள் ஆணியடித்து இரும்பு கம்பிகளை கொண்டு கட்டுவதையும் அதன் முறையான வளர்ச்சியை தடுக்கும் விதத்தில் செயல்படுவதையும் பொதுமக்கள் தவிர்த்து மரங்கள் நன்கு வளர்வதற்கு உண்டான சூழ்நிலை அமைத்து பசுமையை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மதிவாணன் அவர்கள் சோலைவன அமைப்பினர் திரு.இளவரசன், திரு. கௌசிக் மற்றும் திரு. ஜாக்கா, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பசுமையை மீட்டெடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.