அரியலூர்: அரியலூர் ஆயுதப்படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பயிற்சி காவலர்களில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பயிற்சி பெண் காவலர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதன் காரணமாக தற்காலிகமாக பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு அனைவரும் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மீண்டும் 22/05/2020 அன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி மீண்டும் பயிற்சி தொடங்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெண் காவலர்களுக்கு அரசு பொது மருத்துவர் திரு. மணிகண்டன் அவர்கள் தலைமையில் கொரனா பற்றிய சிறப்பு வகுப்பு மற்றும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டது. உடன் காவல் ஆய்வாளர் திருமதி. சுமதி அவர்கள் உடன் இருந்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பயிற்சி காவலர்களும் நல்லபடியாக குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது அவர்கள் இருவரும் அவர்வர் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்து வருகின்றனர். விரைவில் அவர்களும் பயிற்சியில் கலந்து கொள்வார்கள்.