அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி 28/06/2020 ஆம் தேதி அன்று ஆயுதப்படை காவலர்களுக்கு காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் கபசுர குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் காவலர்கள் அனைவரும் அனைத்து பொது இடங்களிலும் பணியாற்றிவருவதால் தங்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் தடுப்பு பொருள்களான சனிடைசர், முக கவசம், போன்றவைகள் பயன்படுத்தி வருகிறோம்.
இதே போன்று உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டு நோய் எதிர்ப்பாற்றல் உடன் இருப்பதன் மூலம் எளிதில் வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என காவலர்களுக்கு ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.
அரியலூர் மாவட்ட ரோந்து வாகனம் ஒன்றில் உதவி ஆய்வாளர் திரு. ராஜசேகர் அவர்கள் இரவு ரோந்து பணியின்போது ஓட்டுனர்களுக்கு புத்துணர்ச்சி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் மற்றும் தேனீர் வழங்கினார்கள்.