அரியலூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, நேற்று இரவு முழுவதும் மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அரியலூர் மாவட்டத்திலுள்ள இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கியச் சாலைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல் துறையினர் அதிகப்படியான கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொது மக்களின் பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
















