அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 29.04.2021 நேற்று சைபர் கிரைம் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள் திறந்து வைத்தார். உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். பொதுமக்கள் Bank fraud, Online Cheating, Online Games, Cheating, Online threatening, ஆன்லைன் பண மோசடி, செல்போன், கணினி திருட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள், இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற ஆன்லைன் குற்றங்களை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.