திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடைபெறும் அநீதிகளை கண்டித்தும் கலவரங்களை நிறுத்த வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கத்துடன் மீஞ்சூர் அரியன் வாயல் மசூதி அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் கமாலுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சையது அப்ரார் அகமத், மாவட்ட துணை செயலாளர் அன்சர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் பல்லாவரம் ஷபி, மீஞ்சூர் வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சேக் முகமது, மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர் அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க ,காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் ,எஸ் டி பி ஐ ,த.மு.மு.க, ஜமாத் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முடிவில் நகர நிர்வாகி ரபி நன்றி கூறினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு