திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதியில் வசித்து வருபவர் சேக் அகமது (40), இவர் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்துடன் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் வசித்துக் கொண்டு வீட்டு வாசலில் இவரது காரை நிறுத்தி உள்ளார்.நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்ட மீஞ்சூர் போலீசார் கார் எரிவதை பார்த்து விட்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார் வீட்டு உரிமையாளர்கள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீ அணைத்தனர் அதற்குள் காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து சாம்பலானது இது குறித்து காரின் உரிமையாளர் ஷேக் அகமது மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார் புகார் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு