தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் புகழ்குமார் (வயது 43). கூழித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக இவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் புகழ்குமார் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் புகழ்குமாருக்கும் பக்கத்து வீட்டினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் புகழ்குமாரின் மனைவி மீண்டும் கோபித்துக்கொண்டு தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த புகழ்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.