கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வாளையாறு டேம் ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவையில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற மினி ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் சிறு, சிறு மூட்டைகளாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோவில் வந்த இரு பெண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது இருவரும் போத்தனூரை சேர்ந்த சரீனா (45), ஓமனா (55) என்பதும், போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் சேகரித்த ரேஷன் அரிசியை சிறு, சிறு மூட்டைகளாக தயார் செய்து, ஆட்டோ மூலம் கேரளாவுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோ டிரைவர் இக்பால் (40) உள்பட 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். ஆட்டோவில் எடுத்து வந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்