ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கடந்த வருடம் உருவாக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் ஒன்றான இராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, அரக்கோணம் இராணிப்பேட்டை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
நாட்டிலேயே அதிகளவில் ரயில் போக்குவரத்து உள்ள ரயில் நிலையங்களில் ஒன்றாகவும், இந்திய பாதுகாப்பு துறையின் முக்கிய கேந்திரமான ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம், துணை ராணுவப்படையான மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி நிலையம், தேசிய பேரிடர் மீட்பு படையின் தென்னிந்தியத் தளம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
தவிர, ரயில்வே பொறியியல் தொழிற்சாலை, தண்டவாள இணைப்பு தொழிற்சாலை, மின் என்ஜின் பணிமனை ஆகியவற்றை கொண்டிருப்பதுடன், மத்திய அரசின் அஞ்சல் துறையின் கோட்டத் தலைநகராகவும், தமிழக அரசின் பதிவுத்துறை, டாஸ்மாக் நிர்வாகம் ஆகியவற்றின் மாவட்டத் தலைநகராகவும், அரக்கோணம் விளங்கி வருகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க அரக்கோணம் நகர காவல் ஆய்வாளராக திரு.கோகுல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். காவல் ஆய்வாளர் திரு கோகுல்ராஜ் 1999 ஆம் ஆண்டு காவல் பணியில் இணைந்தார். சென்னையை சேர்ந்த இவர் சூனாம்பேடு, மணிமங்கலம், ஆம்பூர் காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்த இவர், தற்போது அரக்கோணம் நகர காவல் ஆய்வாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
அரக்கோணம் பகுதிகளில் செயல்படும் கடை ஊழியர்கள் மற்றும் கடைக்கு வரும் நபர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் கைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி வாடிக்கையாளர்களை இடைவெளி விட்டு நிற்க வைக்கவோ அல்லது உட்கார வைக்க வேண்டும். இதுபோன்ற கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும்படி காவல் ஆய்வாளர் திரு.கோகுல்ராஜ் நேரில் சென்று அறிவுறுத்தி வருகின்றார். மேலும் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் முககவசம் அணியாமல் உள்ளோருக்கு முககவசங்கள் வழங்கி வருகின்றார். இவரின் இச்செயல் அப்பகுதி மக்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவரது பணி சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்