திருவாரூர் : மன்னார்குடி நகர காவல் நிலைய சரகம், மழுப்பன் தெருவில் வசித்து, தனியார்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் ராதிகா என்பவருக்கு நிரந்தர அரசு வேலைவாங்கி தருவதாக கூறி உள்ளிக்கோட்டை, வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன்என்பவரது மகன் ஹரீஸ்வரன் (வயது -23). என்பவர் ரூ.5,02,400/-ஐ பெற்றுக்கொண்டு, வேலை வாங்கி தராமல் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தவர் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி ஹரீஸ்வரனை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி திரு.சந்தோஷ், காவல் உதவிஆய்வாளர், நீடாமங்கலம் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படையினர் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி ஹரீஸ்வரன், தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் மேற்படி குற்றவாளி திருப்பூரில் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,அங்கு விரைந்த தனிப்படையினர் திருப்பூர் பாரதி நகர் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளி ஹரீஸ்வரனை கைது செய்து சிறையிலடைத்தனர்.
மேலும், யாரேனும் அரசு வேலை வாங்கி தருவதாகவோ அல்லது வங்கிகடன் பெற்று தருவதாகவோ பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தால் அதை நம்பி பணம்கொடுத்து ஏமாறவேண்டாம் எனவும், பொது மக்கள் விழிப்புடன் இருக்கவும் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் *திரு. S. ஜெயக்குமார், M.Sc(Agri).,* அவர்கள்,அறிவுறுத்தியதோடு, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் எவரேனும் கண்டறியப்படால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.