திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக *திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri.),*அவர்கள், பெறுப்பேற்ற நாட்களில் இருந்து, திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசுவேலைவாங்கி தருவதாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் கூறி மோசடி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் முத்துப்பேட்டை காவல் சரகம், ஜாம்புவானோடை, மேலக்காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் சோமு, (பா.ஜ.க மாவட்ட பொது செயலாளர்) என்பவர் முத்துப்பேட்டை, இடும்பாவனம், காலனிதெருவை சேர்ந்த சாந்தி 50/23,க/பெ.அப்பாதுரை,என்பவரிடம் இருந்து அவரது மகன் ராம்குமாருக்கு கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2021-ம் ஆண்டு பல தவணைகளாக ரூ.2,65,000 பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் வேலை வாங்கிதராததால் மேற்கண்ட சாந்தி, ராஜேந்திரனிடம் பலமுறை அனுகி இது தொடர்பாககேட்டுள்ளார்.
இதற்கு ராஜேந்திரன் சரியான பதில் சொல்லாமல் வேண்டுமென்றே மோசடிசெய்யும் நோக்கத்தில் காலம் தாழ்த்தி வந்துள்ளார். வேலை வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் இருந்து வந்த ராஜேந்திரன் மீது மேற்கண்ட சாந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து, மேற்கண்ட மோசடி தொடர்பாகபுகார் அளித்தன் பேரில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த (15.12.2023)-ந் தேதி மேற்கண்ட மோசடி தொடர்பாக ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தவர் இன்று (17.12.2023) கைது செய்யப்பட்டார். இவர் மேலும் முத்துப்பேட்டை இடும்பாவனம் சிவன்கோவில் பகுதியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்பவரிடமும் வேலைவாங்கிதருவதாக பணம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவருகிறது. மேலும்இது போன்ற மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என மாவட்ட காண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.