திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் பிரதான சாலையில் காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முன்பாக திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து முன்னதாக சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் பின்பக்க இருக்கையில் யாரும் அமராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் பேருந்தில் பயணம் செய்து வந்த ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய பேருந்து மற்றும் காரை இரண்டையும் பறிமுதல் செய்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் கொண்டு வந்து மேற்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
