திருவாரூர் : குடவாசல் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை பணி செய்யவிடாமல் மது போதையில் தகராறு செய்த குடவாசல், வடக்கு தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் பரணிதரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு ஊழியரை (மருத்துவரை) அவரது பணியை செய்யவிடாமல் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். மருத்துவரிடம் தகராறு செய்த நபரை கைது செய்த குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜ் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.