தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை பாதுகாப்பு குறித்து அரசு மருத்துவ கல்லூரி அலுவலக தலைமை அதிகாரி மருத்துவர் திரு. சிவக்குமார், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப, தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் திரு. சைலஸ் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவற்றின் பாதுகாப்புத்தன்மை மற்றும் செயல்பாடுகள் குறித்தும், ஆண் மற்றும் பெண் மருத்துவர்கள் தங்கும் விடுதிகளின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்து, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் கூடுதலாக ஆன்ட்டி ரவுடி டீம் (Anti Rowdy Team) போலீசார் ரோந்து செல்லவும், தூத்துக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் கூடுதலாக காவல்துறையினர் பணியில் ஈடுபடவும் ஏற்பாடுகள் செய்யுமாறு தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.