திருநெல்வேலி மாநகரம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 15.01.2025 – அன்று உள்நோயாளியாக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த முகம்மது ஆசிப் ரகுமான் (29) என்பவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
திடீரென மருத்துவர் உடன் ரகளையில் ஈடுபட்ட அவர் அவசர சிகிச்சை பிரிவில் ரூ 30,000/- மதிப்புடைய கண்ணாடிகளை உடைத்து மருத்துவப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மருத்துவ அதிகாரி மருத்துவர் ஸ்டெபி, (34) கொடுத்த புகாரின் பேரில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்