திருவாரூர் : திருவாரூர் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து அரசு போக்குவரத்து பணிமனைகளில் போடப்பட்டிருக்கும் பாதுகாப்பு பணியினை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் எம்.எஸ்.சி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊதியம் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் திருவாரூர் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த கவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் எம்எஸ்சி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு சிவராமன் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கினார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்