திருவாரூர் : திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கானூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ஜெயசீலன் (21). த/பெ. ஜெய்கணேஷ், தெற்கு தெரு, ஆவராணி புதுச்சேரி, சிக்கல், நாகப்பட்டிணம் என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் கடத்தி வந்த 1.5 கிலோ கஞ்சா (மதிப்பு சுமார் ரூ.15,000) பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட நபரை கைது செய்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், வழிப்பறி, கடத்தல், திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவரகள் எச்சரித்துள்ளார்கள்.