திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு பகுதிக்கு உட்பட்ட அரியன் வாயல் பகுதியில் 6 ஆம் வகுப்பு அறைகளைக் கொண்ட புதிய அரசு பள்ளி கட்டிடத்தை பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு G.ரவி, ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்பு பள்ளி கட்டிடத்தை மிக விரைவில் கட்டி முடிக்க வேண்டி ஒப்பந்ததாரிடம் சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். அவருடன் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத்தலைவர் அலெக்சாண்டர் இரண்டாவது வார்டு கவுன்சிலர் அபூபக்கர், மற்றும் தி.மு.க கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு