திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் 85 ஆண்டு காலமாக இயங்கி வரும் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ வரவேற்று வழிநடத்திய ஆண்டு விழாவில் முன்னாள் காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன் தலைமை வகித்தார். காட்டூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் ரேவதி சண்முகம், கிராம தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளின் வரவேற்பு நடனம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிக்கப்பட்டது. கிராமத்தின் சார்பாக பள்ளிக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டது. இதில் கிராம தலைவர்கள் செயலாளர் பொதுமக்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு